சந்தையில் சீனி விலை மீண்டும் அதிகரிப்பு

Wednesday, 20 October 2021 - 19:35

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சந்தையில் சீனியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் வரையில், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 160 ரூபா முதல் 190 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்வசம் சீனி கையிருப்பு இல்லையென புறக்கோட்டை மொத்த சீனி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில வர்த்தக நிலையங்களில் நுகர்வோர் ஒருவருக்கு, 500 கிராம் சீனி மாத்திரம் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம், சீனிக்கு கட்டுப்பாட்டு விலையை அமுலாக்கியுள்ள சந்தர்ப்பத்தில், சீனியின் விலை அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 122 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை காரணமாக, ஒரு கிலோகிராம் சீனியின் விலை 230 ரூபா வரையில் அதிகரித்திருந்தது.

இதேவேளை, சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்க வேண்டும் என, முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர், நிதி அமைச்சிடம் கோரியுள்ளனர்.