இலங்கையில் முதல் முறையாக ஒரே தடவையில் 6 குழந்தைகளை பிரசவித்த தாய் (படங்கள்)

Thursday, 21 October 2021 - 8:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+6+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், இன்று (21) அதிகாலை பதிவாகியுள்ளது.

அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, 3 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.

இவற்றில் இரண்டாவதாக பிறந்த குழந்தை மாத்திரம் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.No description available.