சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டலை வெளியிட்டது இந்தியா

Thursday, 21 October 2021 - 9:00

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சர்வதேச பயணிகளுக்கு, கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு செல்லும் சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டல் நெறிமுறைகளை இந்திய மத்திய அரசு நேற்று (20) வெளியிட்டது.

இதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல், உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட பயணிகள், விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கொவிட் தொற்று இல்லை என்ற சான்றிதழ் மிகவும் அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கொவிட் தடுப்பூசியை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்களும், தடுப்பூசி செலுத்தாமல் வரும் பயணிகளும், வருகைக்குப் பிந்தைய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

ஏழு நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதுடன், 8 ஆவது நாளில் மீண்டும் கொவிட் பரிசோதனை செய்ய வேண்டும்.

இதன்போது, கொவிட் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டால், அடுத்த ஏழு நாட்களுக்கு அவர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.