மூக்கினால் உறிஞ்சும் கொவிட் தடுப்பு மருந்து - சீனா கண்டுபிடித்துள்ளது

Thursday, 21 October 2021 - 11:53

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
கொவிட் வைரஸ் அடிக்கடி உருமாறி வீரியத்துடன் பரவுவதால், அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மூக்கினால் உறிஞ்சும் கொவிட் தடுப்பு மருந்தை சீனா கண்டுப்பிடித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்தை, சீனாவின் கேன்சினோ பயோலஜிகல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுபற்றிய ஆய்வுகள், பலக்கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், இந்த மருந்து சிறப்பாக செயற்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

ஏற்கனவே உலக நாடுகள் தயாரித்துள்ள சில தடுப்பூசிகள் கொவிட் வைரஸுக்கு எதிராக 100 சதவீதம் செயற்படவில்லை என்ற கருத்து பரவலாகவே காணப்படுகிறது.

இதனால் கொவிட் வைரஸ் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகவுள்ளது.

இந்நிலையில் சீனா தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து எதிர்பார்த்தளவு கொவிட் பரவலை கட்டுப்படுத்துமென சீனா அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த கொவிட் தடுப்பு மருந்துக்கு அதிக எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தடுப்பு மருந்தை செலுத்தினால் உடலில் 250 இல் இருந்து 300 மடங்கு எதிர்ப்பு சக்தி உருவாகுவதாகவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த தகவலை சீனாவில் உள்ள ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.