பிரத்தியேகமாக சமூகவலைத்தள செயலியை நிறுவிய டொனால்ட் ட்ரம்ப்

Thursday, 21 October 2021 - 13:14

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரத்தியேகமாகத் தனக்கான ஒரு புதிய சமூகவலைத்தளத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது, ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னோலஜி குரூப் நிறுவனம் “ட்ரூத் சோஷியல்” என்ற வலைத்தளத்தை ட்ரம்ப் இன்று (21) தொடங்கியுள்ளார்.

“ட்ரூத் சோஷியல்” என்ற இந்தச் செயலி முதலில் அமெரிக்கா முழுவதும் வெளியிடப்படவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த “ட்ரூத் சோஷியல்” செயலியை வரையறுக்கப்பட்ட அளவில் தரவிறக்கம் செய்யும் வகையில் எதிர்வரும் நவம்பரில் எப்பல் ஸ்டோரில் வெளியிடவுள்ளதாகக் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், 2022 ஆம் ஆண்டு முதல் உலகத்தவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுவந்ததால் ட்ரம்பின் கணக்குகளைப் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் முடக்கியிருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்பர் தனக்கெனப் பிரத்தியேகமான சமூகவலைத்தளத்தை இன்று (21) தொடங்கியுள்ளார்.