படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கிச் சூடு: நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி!

Sunday, 24 October 2021 - 11:33

%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%3A+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
ஹோலிவூட்டில் திரைப்படமொன்றின் படப்பிடிப்பின்போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ளார்.

ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரஸ்ட்’ எனும் குறித்த படத்தில் நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

இதன்போது நடிகர் அலெக் பால்ட்வினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்துள்ளார்.

படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியொன்றினை பயன்படுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் துப்பாக்கி சூட்டினால் அந்தப் படத்தின் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தினால் ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.