பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க முடியாது

Sunday, 24 October 2021 - 21:45

+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகள் நாளை(25) மீள திறக்கப்படவுள்ள நிலையில், தம்மால் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க முடியாது என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ருவன் பிரசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமக்கான எவ்வித சுகாதார வழிகாட்டுதல்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் மேலும் தெரிவித்துள்ளார்.