விக்கெட் இழப்பின்றி இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

Sunday, 24 October 2021 - 22:52

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின், சுப்பர் 12 சுற்றின் குழு 2க்கான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களைப் பெற்று 152 ஓட்டங்களை பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதன்படி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்கள் நிறைவில், விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.