பாண்ட்யாவின் உபாதை இந்தியாவின் படுதோல்விக்கு காரணமா?

Monday, 25 October 2021 - 9:33

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%3F
இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் சகல துறை வீரர் ஹர்திக் பாண்ட்யா, இந்தப் போட்டியின் இடைநடுவே துரதிஷ்டவசமாக  உபாதைக்குள்ளானார்.

ஹர்திக் பாண்ட்யா உபாதை காரணமாக வெளியேறியது நேற்றைய போட்டியில் இந்தியாவின் தோல்விக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் அடுத்த போட்டி நியூசிலாந்துக்கு எதிராக எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பாண்ட்யாவின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த பின்னரே அவர் அந்தப் போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.