சூடானின் இடைக்கால அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கைது

Monday, 25 October 2021 - 14:15

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
சூடானின் இடைக்கால அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளில் வைத்து ஆயுதம் ஏந்தியவர்களால் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தரப்பு பிரதமர் அப்துல் ஹம்டொக் கைது செய்யப்பட்டதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த விடயம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர்கள் யாரால் கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பாகத் தகவல் வெளியிடப்படாத நிலையில் இராணுவத்தினரும் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லையென சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சூடான் தலைநகரில் இணையத்தளமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சூடானின் ஜனநாயக சார்புக் குழுக்களினால், அதன் ஆதரவாளர்களுக்கு 'இராணுவ சதி'யைஎதிர்க்குமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.