தமிழகத்தில் பட்டாசு வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஐவர் பலி

Wednesday, 27 October 2021 - 9:38

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
தமிழகம் - கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம் நகரில் உள்ள பட்டாசு வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (26) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக, தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.