இத்தாலியில் தனது பிள்ளைகளை கொலை செய்து தப்பிச் சென்ற இலங்கை தாய்

Wednesday, 27 October 2021 - 14:10

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
இத்தாலியின் வெரோனா பகுதியில் இலங்கை தாய் ஒருவர் தமது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, 3 மற்றும் 11 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளே இவ்வாறு கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் படுக்கையறையிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தாய் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவரா? என்பது தொடர்பில் இத்தாலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.