கட்டுப்பாடுகளை தளர்த்தும் அவுஸ்திரேலியா!

Wednesday, 27 October 2021 - 14:29

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21
தமது நாட்டு பிரஜைகள் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விதித்துள்ள தடையை அடுத்த வாரம் முதல் நீக்குவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அந்நாட்டு உள்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக அவுஸ்திரேலியா கடந்த 19 மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த வாரம் முதல் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய பிரஜைகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கோரவேண்டிய அவசியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு பிரஜைகளுக்கான சில கட்டுப்பாடுகளும் எதிர்வரும் நாட்களில் தளர்த்தப்படும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும், மாணவர்களுக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.