ஆப்கானிஸ்தானில் 700க்கும் மேற்பட்ட சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள் ஆபத்தில்

Wednesday, 27 October 2021 - 15:43

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+700%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
ஆப்கானிஸ்தானில் 700க்கும் மேற்பட்ட சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள் ஆபத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகல போட்டியாளர்களும் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தெரிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்படும் இரண்டு பேரும் அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலிபான் அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி அமெரிக்க தரப்பினரை நாட்டிலிருந்து வெளியேற்றியிருந்தது.

இந்தநிலையில் தங்களது குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள 700 பேர் ஆபத்தில் உள்ளதாகவும் அவர்களில் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடும் பெண்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களும் அடங்குவதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

அவர்களுக்கு இரண்டு வகையில் உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.