நுகேகொடை வாகன விபத்தில் இருவர் பலி! (காணொளி)

Wednesday, 27 October 2021 - 18:25

%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நுகேகொடை - 7ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மகிழுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மஹரகம பகுதியிலிருந்து நுகேகொடை நோக்கிப் பயணித்த மகிழுந்து, முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது நுகேகொடை பகுதியிலிருந்து மஹரகம நோக்கிப் பயணித்த உந்துருளியுடன் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.