நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இன்று இலங்கைக்கு

Thursday, 28 October 2021 - 8:02

%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இன்றைய தினம் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சின் செயலாளர் உதித் ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் அவசர நிலை ஏற்படுமாயின் விவசாயிகளுக்கு, பொருத்தமான கிருமிநாசினியை வழங்குவதற்கு அறிவியல் ரீதியில் ஆராய்வது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய பக்டீரியா உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட சீனாவின் சேதன பசளை அடங்கிய கப்பல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படமாட்டாது என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நேற்று (27) தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் பெரும் போகத்தின் பயிரிடலுக்கு விவசாயிகளுக்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.