டிசம்பரில் இன்னுமொரு கொவிட் அலை - வெளியாகும் புதிய தகவல்கள் (காணொளி)

Thursday, 28 October 2021 - 8:07

%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் உப தலைவர் எஸ்.ஏ.யு.டீ குலத்திலக்க எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் அமுலாகியிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றமை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் மக்கள் கடைப்பிடிக்காமை என்பன காரணமாக இந்நிலை ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பெரும்பாலானவர்கள் கொரோனா பரிசோதனைகளைச் செய்துக்கொள்வதனை நிராகரித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவிடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கமும் தெரிவித்திருந்தார்.