நேற்றைய தினம் 160,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

Thursday, 28 October 2021 - 13:03

+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+160%2C000%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9
நாட்டில் நேற்றைய தினம் 165,260 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 4,299 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 48,889 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

1,738 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

108,372 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும் 1,883 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அதேவேளை 75 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும், 4 பேருக்கு ஸ்புட்னிக் V முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.