கொரியா மீண்டும் இலங்கை பணியாளர்களுக்கு அழைப்பு

Saturday, 13 November 2021 - 8:29

+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கை பணியாளர்களை மீண்டும் பணிக்கமர்த்த தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொரியாவிற்குள் வெளிநாட்டு பணியாளர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னரை விட கொவிட் தொற்று மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க கொரியா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொரிய அரசாங்கம், கொரோனா வைரஸ் தடுப்பு திட்டத்திற்கமைய சகல பணியாளர்களும் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அந்த தொகை படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பணியாளர்களினால் முன்னர் வழங்கப்பட்ட பெறுமதி மிக்க பங்களிப்பினை கொரிய அரசாங்கமும் இலங்கையில் உள்ள தூதுவராலயமும் மதிப்பதாகவும் இலங்கைக்கான கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.