பங்களாதேஷ் உடனான வர்த்தகத்தினை மேம்படுத்த நடவடிக்கை

Sunday, 14 November 2021 - 21:44

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்தினை மேம்படுத்தும் நோக்கில், ஏற்றுமதி அபிவிருத்தி சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான சந்திப்பொன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் ரரிக் அரிபுல் இஸ்லாம் மற்றும் பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் சமுகமளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், அதற்கான தீர்வுகளும் உடனுக்கு உடன் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான கலந்துரையாடல் மூலம் இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் பெரும் நன்மை அடையும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன், ஏற்றுமதி நடவடிக்கைகளை இலகுவாக்கும் தன்மையும் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் சுரேஷ் டி மெல் தெரிவித்தார்.

அதேவேளை, கடந்த வருடம் இரு நாடுகளுக்கு இடையேயான ஏற்றுமதி 20 கோடி அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.