சிலோன் மசாலா தேயிலையின் புதிய வர்த்தக நாமமான 'சூ சாய்' அறிமுகம்

Monday, 15 November 2021 - 10:47

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%27%E0%AE%9A%E0%AF%82+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%27+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சிலோன் மசாலா தேயிலையின் புதிய வர்த்தக நாமமான 'சூ சாய்' ஓமானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வு ஓமான் தேசிய வங்கி அரங்கில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

சிலோன் மசாலா தேயிலை, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10க்கும் மேற்பட்ட இயற்கையான உயர்தர சுவையூட்டிகளைக் கொண்டுள்ளது.

ஏலம், கறுவா, கராம்பு, சோம்பு, சாதிக்காய், மிளகு, இஞ்சி, மஞ்சள் மற்றும் சீரகம் போன்ற சுவையூட்டிகளுடன் கூடிய இந்தத் தேயிலை, மசாலா தேயிலை சார்ந்த தொழில் துறையில் தனித்துவத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.