பணவனுப்பல்கள் தொடர்பில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது - இலங்கை மத்திய வங்கி

Monday, 15 November 2021 - 22:31

%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படும் என்று வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கிக்கு ஏற்கனவே கிடைக்கின்ற இப்பாய்ச்சலினை பிணையமாக்குகின்ற சாத்தியப்பாட்டினைக் கண்டறிவதற்காக தற்போது முன்மொழிவுக்கான கோரிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாடானது ஏதேனும் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீது தாக்கம் எதனையும் கொண்டிராது என்பதுடன் கடந்தகாலங்களைப் போன்று பணவனுப்பல்களை இலங்கையில் உள்ள வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் தடையின்றி தொடர்ந்தும் வைத்திருக்கலாம் அல்லது இலங்கை ரூபாவாக மாற்றலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது

அதற்கமைய, பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் அவ்வாறான உண்மையற்ற தகவல்களால் தவறாக வழிநடத்தப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.