இலங்கை - நேபாளத்திற்கு இடையேயான இருதரப்பு சுற்றுலாத்துறையினை மேம்படுத்த நடவடிக்கை

Tuesday, 16 November 2021 - 10:22

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையேயான இருதரப்பு சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒரு கட்டமாக நேபாளத்தின் பிரபல பயண முகவர் நிறுவனங்களைச் சேர்ந்த 30 பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

குறித்த குழு இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியினில், மேலதிக நேபாள சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைத்தல் குறித்து இலங்கை சுற்றுலா தரப்பினருடன் விரிவாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இமய மலைக்கு செல்லும் உத்தேச இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு மலையேறும் விடயங்கள் குறித்தும் அவர்கள் விளக்கம் அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடங்கியிருந்த சுற்றுலாப் பயண நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர, தற்போது நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையே வாரத்திற்கு நான்கு நேரடி வானூர்தி சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.