கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அதிகரிப்பு

Wednesday, 17 November 2021 - 11:35

+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் கடந்த ஒக்டோபர் மாதம் விரிவடைந்திருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் தயாரிப்பு நடவடிக்கைகள் வலுவாக மீட்சியடைவதனை எடுத்துக்காட்டி, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.1 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் ஒக்டோபரில் 60.4 ஆக அதிகரித்துள்ளது.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் இந்த அதிகரிப்பிற்கு அனைத்து சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்ததென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.