நடிகை சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம்: கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முறைப்பாடு

Thursday, 18 November 2021 - 12:59

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சினேகா தனியார் ஏற்றுமதி நிறுவனமொன்றின் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

தொழிலதிபர்கள் இருவர் தங்கள் நிறுவனத்துக்குப் பெரும் தொகையை முதலீடு செய்தால் மாதாந்தம் குறிப்பிட்ட சதவீதம் இலாபமாகக் கிடைப்பதாக கூறியதால், இணையவழியில் 25 இலட்சம் ரூபாவும், நேரில் ஒரு இலட்சம் ரூபாவும் (இந்திய நாணய பெறுமதியில்) கொடுத்ததாக நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் குறிப்பிட்டவாறு மாதாந்த இலாபம் ஐந்து மாதங்கள் கடந்தும் கிடைக்கப்பெறாத நிலையில், அசல் தொகையைக் கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் அளித்திருந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.