பிறந்த நாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா

Thursday, 18 November 2021 - 16:15

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கனெக்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.

தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள 'கனெக்ட்' படத்தின் முதல் பார்வை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.