இந்திய அணி பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும்

Thursday, 18 November 2021 - 22:04

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இந்திய அணி, பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும் என இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

2025ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, நேரடி போட்டித் தொடர், கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இதுவரை நடைபெறவில்லை.

சர்வதேச கிரிககட் பேரவை நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா பங்கேற்குமா? என்பது தொடர்பில் பதிலளித்தபோது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும்போது பல்வேறு விடயங்கள் கருத்திற்கொள்ளப்படும்.

நேரம் வரும்போது என்ன செய்வது என்று பார்ப்போம்.

பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம் என்று இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.