சமூக பாதுகாப்பு வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்

Friday, 19 November 2021 - 12:53

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கொரோனா பரவல் மற்றும் 2019ஆம் ஆண்டு பாதீட்டினூடாக வழங்கப்பட்ட வரிச் சலுகை என்பன காரணமாக அரசாங்கத்துக்கான வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.டபிள்யூ.சி பண்டார இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு வரியானது அத்தியாவசிய பொருட்களுக்கும் அதனை விநியோகிப்பவர்களிடமிருந்தும் அறவிடப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.