இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி

Friday, 19 November 2021 - 23:38

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+07+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிளுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக க்ளென் பிலிப்ஸ் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ஹர்ஷல் படேல் 25 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 154 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக கேஎல் ராகுல் 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி 16 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.