விஜய்யின் அடுத்த படத்தின் கதை இதுவா?

Saturday, 20 November 2021 - 14:55

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%3F+
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த படத்துக்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் கதை மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய விபரங்கள் இணையத்தளத்தில் கசிந்துள்ளது.

படத்தில் விஜய் எரோடோமேனியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதாக கூறப்படுகிறது.

மனநோய் பாதிப்போடு வாழ்க்கையில் எப்படி போராடுகிறார். அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை என இணையத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.