பாகிஸ்தான் அணி 8 விக்கட்களால் வெற்றி

Saturday, 20 November 2021 - 20:15

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+8+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 109 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது.

இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.