ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

Sunday, 21 November 2021 - 16:04

%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஒக்டோபர் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பெறுமதி 116 கோடியே 62 இலட்சம் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 35.9 சதவீத அதிகரிப்பு என இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக ஏற்றுமதிகள் 100 கோடி அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

இதேவேளை, இலங்கை வரலாற்றிலேயே ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி முன்னர் எப்போதும் இல்லாத வகையில் அதி உச்சமானது என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் சுரேஷ் டி. டீ மெல் தெரிவித்துள்ளார்.

மேற்கத்தேய நாடுகளுடனான புதிய சந்தை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டமை என்பனவே இதற்கான முக்கிய காரணிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் புடவை துணி வகைகள், இறப்பர் உற்பத்தி பொருட்கள், தெங்கு சார்ந்த பொருட்கள் என்பனவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளன.

இது தவிர, மின்சார மற்றும் இலத்தினரியல் பொருட்கள், அத்துடன் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியும் இந்த காலப்பகுதியில் அதிகரித்திருந்ததாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் சுரேஷ் டி. டீ மெல் தெரிவித்துள்ளார்.