இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்நாள் ஆட்டம் நிறைவு

Sunday, 21 November 2021 - 19:08

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 13 வது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தார்.