கனடா - பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் மூவரின் சடலங்கள் மீட்பு

Sunday, 21 November 2021 - 22:17

%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மண்சரிவு இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து, மூன்று சடலங்களை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், உணவு மற்றும் எரிபொருள் விநியோகமும் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்குவர் மாகாணத்துடனான பேருந்து மற்றும் தொடருந்து போக்குவரத்து வீதிகள் தடைப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், இன்று(20) வட பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியிலும் காலநிலை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 14 ஆயிரம் பேர் பாதுகாப்பான மேட்டு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.