3 - 0 என்ற அடிப்படையில் தொடரை வென்றது இந்தியா!

Monday, 22 November 2021 - 8:00

3+-+0+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 56 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தார்.

185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 17.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்டில் 51 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அக்ஷர் பட்டேல் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.