பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடிக்கு அபராதம்!

Monday, 22 November 2021 - 6:38

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21
பங்காளதேஷ் அணி துடுப்பாட்ட வீரரின் காலில் வேண்டுமென்றே பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று இருபதுக்கு20,  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்காளதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

இரு அணிகளும் மோதிக்கொண்ட முதல் இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான்  வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து டாக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2 ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் ஹபிப் ஹூசைன் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்து காலில் காயத்தை ஏற்படுத்தியமைக்காக, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய பந்தில் ஹபிப் சிக்ஸர் ஒன்றை விளாசியிருந்தார். அதனையடுத்து, அப்ரிடி இந்த வகையில் கோபத்தை வெளிப்படுத்தி இவ்வாறு சிக்கியுள்ளார்.