அமெரிக்காவில் கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது மகிழுந்து மோதி விபத்து

Monday, 22 November 2021 - 13:30

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
அமெரிக்காவின் விஸ்கொன்சின் பகுதியில் நடத்தப்பட்ட கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது மகிழுந்து ஒன்று மோதியதில் பலர் மரணித்ததாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி நேற்று(21) மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 20 பேர் விபத்துக்குள்ளானதாகச் சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அவர்களில் சிலர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளதோடு உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

அத்துடன் விபத்துக்குள்ளான மகிழுந்திலிருந்து சந்தேகநபர் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

மகிழுந்தின் சாரதி உள்ளிட்ட காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.