விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன்

Monday, 22 November 2021 - 18:20

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வௌியாகியுள்ளன.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்.சி.புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து 'மைக்கேல்' என்ற படத்தைத் தயாரிக்கிறது.

அதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

அத்துடன், விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார்.

பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய அவர் சில படங்களிலும், வலைத்தளத் தொடர்களிலும் நடித்துத் தன்னுடைய நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.