இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு

Monday, 22 November 2021 - 18:43

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (22) நிறைவுபெற்றது.

போட்டியில் தமது முதலாவது இனிங்ஸ்க்காகத் துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.