இந்தியாவில் மனைவிக்காக கட்டப்பட்ட மற்றுமொரு தாஜ்மஹால்! (படங்கள்)

Monday, 22 November 2021 - 19:54

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் சௌக்சே, தாஜ்மஹாலை போன்ற ஒரு வீட்டைக் கட்டி தனது மனைவிக்குப் பரிசளித்துள்ளார்.

4 படுக்கையறைகளுடன் கூடிய இந்த வீடு தாஜ்மஹாலின் முப்பரிமாணப் படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 90 சதுர மீற்றர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு இரண்டு தளங்களோடு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் சமையலறை, நூலகம், தியான அறை ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலையும், அதனை ஒத்ததாக இருக்கும்  பீபி கா மக்பராவையும் நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து இந்த வீட்டை அவர் கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்கு 3 வருடங்களானதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

No description available.
No description available.
No description available.
No description available.