காணாமல் போன சீன டென்னிஸ் வீராங்கனை தொடர்பில் வெளியான தகவல்

Monday, 22 November 2021 - 21:42

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் (Peng Shuai) பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பெங்குடன் அவர் உரையாடியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உப தலைவரினால் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக அவர் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

அவர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியேறாத நிலையில் சர்வதேச ரீதியாக பல நாடுகளும் விளையாட்டு அமைப்புகளும் சீனாவிற்கு எதிராக கண்டனத்தை வெளியிட்டன.

அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அத்தாட்சியினை வெளிப்படுத்தும்படி அவை சீனாவிற்கு அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தன.

சர்வதேச ரீதியாக சீனாவிற்கு எதிராக வெளிப்படுத்தப்பட்ட அழுத்தத்தினை அடுத்து, சீன அரசாங்கம், டென்னிஸ் வீராங்கனை ஷூவாய் குறித்து அரச ஊடகங்களில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும், சீன அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் முழு அளவிலான திருப்தியினை தரவில்லை என பெண்கள் டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

டென்னிஸ் வீராங்கனை ஷூவாய் உடன் நேரடியாகவும் சுதந்திரமாகவும் உரையாடுவதற்கான வசதி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அந்தச் சங்கத்தின் பேச்சாளர் கோரியுள்ளார்.