பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?

Tuesday, 23 November 2021 - 6:53

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%3F
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பொஸ் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன.

தற்போது 5ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால், எதிர்வரும் பிக்பொஸ் நிகழ்ச்சிகளில் கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பொபாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து எதிர்வரும் பிக்பொஸ் நிகழ்ச்சிகளை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.