கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தமிழ்நாடு வெற்றி - ஷாருக் கான் ஆட்டத்தை ரசித்த தோனி

Tuesday, 23 November 2021 - 10:31

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+-+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF
சையது முஸ்தாக் அலி கிண்ணத்தொடரின் இறுதி போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தமிழக அணித்தலைவர் விஜய் சங்கர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கர்நாடகா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக மனோகர் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தமிழக அணியின் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், 152 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தமிழக அணி 20 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ஜெகதீசன் 41 ஓட்டங்களையும், ஷரி நிஷாந்த் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய துடுப்பாட்ட வீரர் ஷாருக்கான் தமிழக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில், கடைசி பந்தில் ஷாருக் கான் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திரசிங் தோனி ரசித்துப் பார்த்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பலமுறை சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைக்கும் உலகின் தலைசிறந்த ஃபினிஷர் என்ற பெயர்பெற்ற தோனி, ஷாருக்கான் கடைசி பந்து சிக்சரை ரசித்த காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.