பல்கேரியாவில் பேருந்து தீப்பிடித்து விபத்து: 12 சிறுவர்கள் உட்பட 45 பேர் பலி!

Tuesday, 23 November 2021 - 14:03

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+12+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+45+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
மேற்கு பல்கேரியாவில் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 12 சிறுவர்கள் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் சோபியாவின் தென்மேற்கில் உள்ள போஸ்னெக் கிராமத்திற்கு அருகே அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2:00 மணியளவில் (00:00 GMT) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மசிடோனியாவில் பதிவு செய்யப்பட்ட பேருந்து, துருக்கியிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பேருந்தில் இருந்து தப்பிய 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கேரிய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதா அல்லது விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வாகனம் நெடுஞ்சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதாகத் தோன்றியதாகவும், சாலையின் ஒரு பகுதி தடுப்புச் சுவர் அகற்றப்பட்டிருப்பதை படங்கள் காட்டுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.