ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் கௌரி கிஷன், அனகா

Tuesday, 23 November 2021 - 15:52

%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE
96, மாஸ்டர், கர்ணன், படங்களில் நடித்த கௌரி கிஷனும், நட்பே துணை, டிக்கிலோனா படங்களில் நடித்த அனகாவும் 'மகிழினி' என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர்.

வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கியுள்ள 'மகிழினி' எனும் இப்பாடல், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ளதுடன், சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள்.

இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட மகிழினி ஆல்பத்தின் கருவாகும்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் மகிழினி ஆல்பத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் மகிழினியின் பின்னணியில் உள்ள எண்ணம் எனக் குறிப்பிட்டார்.