பிரியங்கா சொப்ரா விவாகரத்து?

Tuesday, 23 November 2021 - 19:01

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3F+
பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது கணவரின் பெயரை அவர் சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கியதையடுத்து இவ்வாறு பல கருத்துகள் வெளியாகி வருகின்றன.

தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயாகியாக வலம்வருகிறார்.

அவர் பாடகர் நிக் ஜோனஸை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹொலிவூட் படங்களிலும் நடித்து வருகிறார்.

திருமணம் முடிந்து 3 மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக பிரபல பத்திரிகையொன்றில் செய்தி வெளியானது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் நேற்று (22) பகிர்ந்து விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அத்துடன், இது போன்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என பிரியங்காவின் தாயார் கோரியுள்ளார்.

Priyanka Chopra Officially Changes Her Name to 'Priyanka Chopra Jonas' on  Her Instagram Handle

Priyanka Chopra