இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரிக்கும் பாகிஸ்தான்

Tuesday, 23 November 2021 - 20:16

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
எப்-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானத்தை, இந்திய விமானப்படை விங் கொமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காக, அபிநந்தனுக்கு, இந்தியாவின் 3 ஆவது உயரிய பாதுகாப்புத்துறை விருதான வீர் சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படை விமானியால் பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா கூறுவதை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

சம்பவ தினத்தன்று எப்-16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லையென சர்வதேச நிபுணர்களும் அமெரிக்க அதிகாரிகளும் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கின்ற்னர் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.