ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோர் சரணடைந்துள்ளனர்

Tuesday, 23 November 2021 - 21:53

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+100+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோர், அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி இடம்பெறுகின்றது.

இந்த நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் அவ்வப்போது சில தாக்குதல்களை நடத்திவருவதாகவும், அதற்கு எதிர்த் தாக்குதலை தலிபான்கள் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜலதாபாத் நகரத்தில் 100 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள், அதிகரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.