பிக்பொஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் மற்றுமொரு பிரபலம்

Wednesday, 24 November 2021 - 6:54

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

பிரபல தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்து தற்போது 5 ஆவது சீசன் நடைபெற்று வருவதுடன் அதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்திருந்தார்.

தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால்,  அவர் சில வாரங்களுக்கு பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அடுத்துவரும் பிக்பொஸ் நிகழ்ச்சியைதொகுத்து வழங்குவது யார் என்ற கேள்விரசிகர்கள் மத்தியில் எழுந்து இருந்தது.

இந்நிலையில், தொடர்ந்துவரும் பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி இதற்கு முன்னதாக‘மாஸ்டர் செப்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிமைக்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Watch: Vijay Sethupathi looks festive in new promo from 'MasterChef Tamil'  | The News Minute