கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

Wednesday, 24 November 2021 - 11:48

%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் பயங்கரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் கிடைப்பதாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் டெல்லி காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.

இந்நிலையில், கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அவரின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கொலை மிரட்டல் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.